இலங்கைவரை ஒளி வீசக்கூடிய களங்கரை விளக்கம்..! தமிழகம் - தனுஸ்கோடியில் திறக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
இலங்கைவரை ஒளி வீசக்கூடிய களங்கரை விளக்கம்..! தமிழகம் - தனுஸ்கோடியில் திறக்கப்பட்டது..

தமிழகம் இராமேஸ்வரம் - தனுஸ்கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை இந்திய கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இந்திய எல்லை பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்கரை பகுதிகளை கண்காணிப்பதற்காகவும், 

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டு 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடியின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு வசதியும், கலங்கரை விளக்க வளாகத்தில் குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு