ஐ.பி.எல் தொடரில் களமிறங்கும் கிறிஸ் கெயில்!!

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரில் களமிறங்கும் கிறிஸ் கெயில்!!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவவுள்ள ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில். வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இவருடைய ரி-20 ஆட்டத்திற்கு உலகம் முழுவதிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

ஈபிள் தொடரில் பெங்களூரு அணிக்காக பல வருடங்களாக தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி வந்த இவர் அதன்பின் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இருப்பினும் இந்த வருடம் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் அவர் தற்போது பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி, அதில் அவர் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜ.பி.எல் தொடர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்:- 

கடந்த இரு ஆண்டுகளாக, ஐ.பி.எல் தொடரில் நான் சரியாக நடத்தப்படவில்லை. கிரிக்கெட்டுக்காகவும் ஐ.பி.எல் தொடருக்காகவும் நான் இவ்வளவு செய்த பிறகும் எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.

அதனால் தான் இனி ஐ.பி.எல் தொடரில் விளையாட தேவையில்லை என்று முடிவு எடுத்து மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் அடுத்த வருடம் விளையாட முடிவு எடுத்துள்ளேன்.

ஐ.பி.எல் தொடரில் இதுவரை நான் கே.கே.ஆர், ஆர்.சி.பி, பஞ்சாப் என 3 அணிகளுக்காக தான் விளையாடியுள்ளேன். இதில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்காக மீண்டும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்று தர வேண்டும் என நினைக்கிறேன் என்றார். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio