கடல்வழியாக இந்தியா செல்வதற்கு முயற்சி..! யாழ்.குருநகரை சேர்ந்தவர்கள் உட்பட 12 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக இந்தியா செல்வதற்கு முயற்சி..! யாழ்.குருநகரை சேர்ந்தவர்கள் உட்பட 12 பேர் கைது...

கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் - மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் இன்று அதிகாலை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 5 பேரும்,  மடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், யாழ்.குருநகரைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் படையினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio