பகைவருக்கும் அருள்வாய் நன் நெஞ்சே...! தமிழக முதல்வருக்கான நன்றி கூறலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருக்கம்..

ஆசிரியர் - Editor I
பகைவருக்கும் அருள்வாய் நன் நெஞ்சே...! தமிழக முதல்வருக்கான நன்றி கூறலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருக்கம்..

இலங்கை எதிர்கொண்டிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு எடுத்துள்ள பிரயத்தனத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது நன்றிகளை கூறியுள்ளது. 

இது குறித்து கட்சியின் ஊடக பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது ருவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 40,000 தொன் அரிசி மற்றும் 500 தொன் பால்மா என்வற்றை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள தமிழக அரசு , 

இதற்காக அனுமதியைக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தார். இந்நிலையிலேயே சுமந்திரன் இதற்கு நன்றி தெரிவிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி பொருட்கள் வழங்க முன்வந்த முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான நன்றிகள். 'பகைவருக்கும் அருள்வாய் நன் நெஞ்சே என வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள்' என்று 

தமிழக முதலமைச்சரின் உரையை சுட்டிக்காட்டி சுமந்திரன் டுவிட்டர் பதிவை செய்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு