கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த 7 பேர் கைது..! 4 பேர் குழந்தைகள்...

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த 7 பேர் கைது..! 4 பேர் குழந்தைகள்...

கடல்வழியாக தமிழ்நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு முயற்சித்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் மன்னார் - பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதாவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா இரு பெண் ஒரு ஆண் உட்பட மூன்று பெரியவர்களுக்கும் 

தலா 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், நான்கு பிள்ளைகளையும் பெற்றோர்களுடன் சேர்ப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு