SuperTopAds

உண்மை கசப்பானது; நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ஆசிரியர் - Admin
உண்மை கசப்பானது; நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

நாடு பெரும் அதல பாதாளத்தில் விழுந்துள்ளதாகவும் அதனை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மீள்வது எளிதல்ல என்பது கசப்பான உண்மையாகும் என தெரிவித்த அவர், உண்மையை பேசி வீட்டுக்கு செல்ல வேண்டுமானாலும் அது குறித்து தான் கவலையடைய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை ஆள்பவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும், அவர்களே அர்ப்பனிப்பு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தமது குழு தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களாக செயலிழந்து இருந்த அரசாங்கம் தற்போது நெருக்கடி காரணமாக தீர்வு கிடைக்குமா என எதிர்க்கட்சிகளிடம் கேட்பதாகவும், தற்போது தானும் தனது குழுவும் ஆட்சியில் இருந்திருந்தால் நாடு இவ்வாறானதொரு பாதாளத்திற்கு தள்ளப்படுவதற்கு நாம் இடமளித்திருக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாததை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து ஒரு மூச்சு” மற்றும் “பிரபஞ்சம்” போன்ற வேலைத்திட்டங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றும் அவர் கூறினார்.

அன்றிலிருந்து தான் முன்கூட்டிய விடுத்த எச்சரிக்கைகள் ஏறக்குறைய உண்மையாகிவிட்டதாகவும், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கும் கண்ணீருக்கும் தானும் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ராஜகிரிய பிரதேசத்தில் ஆதரவற்ற 900 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (12) மாலை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.