நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்

ஆசிரியர் - Admin
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.

நேற்று (12) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் மக்களின் இதயத்துடிப்போடு ஐக்கிய மக்கள் சக்தி ஓன்றிணைந்து நிற்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக பாராளுமன்றத்தில் சாத்தியமான அனைத்து ஜனநாயக வெற்றிகளையும் அடைவதற்காக நாங்கள் பாடுபடுவோம் எனவும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணைக்கு மேலதிகமாக, 20 ஆவது திருத்தம் தலைகீழாக மாற்றப்பட்டு 19 ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும் அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு