நாட்டு மக்களுக்கு குடும்ப ஆட்சியே பிரச்சினை என்றால் அதனை கைவிடுவதற்குத் தயாராகிவிட்டோம்..! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ..
நாட்டில் குடும்ப ஆட்சிதான் பிரச்சினை என்றால் அதைக் கைவிடுவதற்கான ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்துவிட்டோம். மக்களின் எதிர்ப்பைக் கேட்டு ஒட்டுமொத்த அமைச்சரவையும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தது.
எனக்கும் ஜனாதிபதிக்கும் ராஜினாமா செய்வது கடினம் அல்ல. ஆனால், ஜனநாயகக் கட்டமைப்பை சீர்குலைக்காத முடிவை எடுக்க, மக்களின் இறையாண்மையை நிலைநாட்டுவது நமது பொறுப்பு.
அதை மட்டும் மனதில் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம். அரசியலில் நாம் விட்டுக் கொடுப்பதற்கும், தோல்விக்கும் பழக்கப்பட்டவர்கள். மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான உரை கீழே..