யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு மோசடியா? வன்முறையாக மாறிய வாய்த்தர்க்கம்!!

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு மோசடியா? வன்முறையாக மாறிய வாய்த்தர்க்கம்!!

யாழ்ப்பாணத்தில் மோசடியான முறையில் டீசல் விநியோகம் செய்த எரிபொருள் நிலையத்துக்கு எதிராக போலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் பிரதேசத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் விநியோகிக்கும் டீசலில் அரைவாசிக்கு அரைவாசி நீர் கலக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிலையத்துக்கு சென்ற போலிசார் பரிசோதனையை மேற்கொண்டனர்.மாதிரியை உரிய முறையில் இட்டு சோதனையிட்ட அறிக்கை பெற்றுக்கொள்ளும் வரையில் டீசல் விநியோகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலைப் பெற்று வயலுக்கு சென்ற சாரதிகளின் உழவு யந்திரங்கள் இடை நடுவில் செயலிழந்துள்ளன.

இதனால் கோபமடைந்த சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாய்த்தர்க்கம் பெரும் மோதலாக மாறியுள்ளது.

இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொக்குவில் போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த நாட்களில் பெய்த அடைமழை காரணமாக எண்ணெய் தொட்டிக்குள் மழைநீர் சென்றிருக்கக்கூடும் என குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் போலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு