ஐனாதிபதியுடனான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளும்!
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சிகள் மாநாடு நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.