தலைமன்னாரிலிருந்து 13 மணி நேரத்தில் இந்தியாவிற்கு நீந்திச் சென்ற 13 வயது சிறுமி!!

ஆசிரியர் - Editor II
தலைமன்னாரிலிருந்து 13 மணி நேரத்தில் இந்தியாவிற்கு நீந்திச் சென்ற 13 வயது சிறுமி!!

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரத்தை 13 வயது சிறுமி ஒருவர் 13 மணி நேரத்தில் நீந்திக்கடந்துள்ளார்.

இந்தியா முன்பையைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமி ஒருவரே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜியா ராய் என்ற கடற்படை அதிகாரியின் மகளே இவ்வாறு தலைமன்னாரிலிருந்து அரிச்சல்முனை வரை நீந்திச் சென்றுள்ளார்.

ராய் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று தனது பயணத்தை ஆரம்பித்தார். ஜியா ராய்க்கு உதவ, இலங்கை கடற்படை அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை பாதுகாப்பு அளித்தது, அங்கிருந்து இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு வழங்கியது.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.22 மணிக்கு தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மாலை 5.32 மணியளவில்,  13 மணித்தியாலங்களில்  அரிச்சல்முனையை அடைந்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு