SuperTopAds

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

ஆசிரியர் - Admin
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். 

இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். பாதாமில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். போலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.