விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்..! இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவிப்பு..
நாட்டில் அடுத்த வாரம் தொடக்கம் விசேட தடுப்பூசி வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அதற்கமைய, எதிர்காலத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் மத்திய நிலையமொன்றை முன்னெடுக்க இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
தியதலாவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து,
மிகவிரைவில் மக்களுக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று, நான்கு வாரங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இதுவரையில் பூஸ்ட்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய
இராணுவம் உள்ளிட்ட முப்படையினரை இணைத்துகொண்டு சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்காக
விசேட மத்திய நிலையத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.