விபத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பவதி..! வயிற்றிலிருந்த சிசு உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
விபத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பவதி..! வயிற்றிலிருந்த சிசு உயிரிழந்த சோகம்..

கார் - ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பவதியின் வயிற்றிலிருந்த சிசு உயிரிழந்த நிலையில் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் வாழைச்சேனை - காயங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய 9 மாத கர்ப்பவதியான

சிவானந்தம் சுபாஜினி மற்றும் உறவினர் உட்பட 4 பேர் சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை பூநகரில் இருந்து பொலனறுவை செவினப்பிட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் பிரயாணித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பகல் 2 மணியளவில் காயங்கேணி பாலத்துக்கு அருகில் பிரயாணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியின் பின்பக்க சில்லு காற்று போனதையடுத்து முச்சக்கரவண்டியை 

வீதியின் ஓரமாக நிறுத்த முற்பட்டபோது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி தாயார் அவரது உறவினர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனை தொடர்ந்து வாழசைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி தாயாரை மேலதிக சிகிச்சைக்காக நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், 

வயிற்றிலுள்ள சிசு உயிரிழந்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை மூலம் உயிரிழந்த சிசிவை வெளியில் எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை காரை செலுத்தி சென்ற நபரை பொலிசார் கைது செய்து 

நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு