ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்து கூட்டமைப்பு அறிவிப்பு! செல்வம் அடைக்கலநாதன் மட்டும் உண்டு களித்தார்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்து கூட்டமைப்பு அறிவிப்பு! செல்வம் அடைக்கலநாதன் மட்டும் உண்டு களித்தார்..

ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தவிர்ந்த மற்றய அனைவரும் புறக்கணித்துள்ளனர். 

9 ஆம் நாடாளுமன்றின் 2 ஆம் கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்றில் ஜனாதிபதியால் 

சம்பிரதாய பூர்வமாக விருந்துபசாரம் ஒன்று வழங்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததாக அறிய கிடைத்தது.

குறித்த தேநீர் விருந்துபசாரத்தைப் புறக்கணிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்ததாகத் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio