அடுத்தடுத்து 3 விபத்துக்களை ஏற்படுத்தி 6 பேரை காயப்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி! 2 விபத்துக்களின்போது தப்பி ஓடி 3வது விபத்தில் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து 3 விபத்துக்களை ஏற்படுத்தி 6 பேரை காயப்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி! 2 விபத்துக்களின்போது தப்பி ஓடி 3வது விபத்தில் சிக்கினார்..

ஒரே முச்சக்கர வண்டி அடுத்தடுத்து 3 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த விபத்துக்களில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, 

திருகோணமலை நகர பகுதியில் புதுவருட தினமான 1ம் திகதி இரவு 7.00 மணியளவில் டொக்யார்ட் வீதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடந்து சென்ற ஒருவர் உடன் மோதிவிட்டு 

அங்கிருந்து தப்பிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி மீண்டும் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்களில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருடன் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்துள்ளது.

பின்னர் பொதுமக்களினால் முச்சக்கரவண்டியில் நிமிர்த்தி எடுக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி திருகோணமலை பிரதான வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதிய நிலையில் 

பொதுமக்களினால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவ் விபத்தில் படுகாயமடைந்த 6 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு