SuperTopAds

2000 மீனவர்களை காணவில்லை.. உறவினர்கள் கதறல்.! தேடுதல் வேட்டையில் கப்பற்படை, விமானப்படை தீவிரம்!

ஆசிரியர் - Editor II
2000 மீனவர்களை காணவில்லை.. உறவினர்கள் கதறல்.! தேடுதல் வேட்டையில் கப்பற்படை, விமானப்படை தீவிரம்!

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2000 மீனவர்களை காணவில்லை என்று கன்னியாகுமரி மீனவர்கள் மற்றும் உறவினர்கள் கூறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 2 நாட்களாக ஓகி புயலில் கோரத்தாண்டவத்தால் கன்னியாகுமரி, நெல்லை, நாகர்கோவில் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை தேடும் பணியில் இந்திய விமானப்படை, மற்றும் கப்பற்படை தீவிரமாக இறங்கியுள்ளது.

இது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உடனடியாக விமானப்படையின் ஹெலிகாப்டர்களை அதிகளவு பயன்படுத்த உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சர் மீனவர்களை மீட்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்ப இறைவனை பிராத்திப்போம்.

2000-fisher-man-missing