பதிவுத் திருமண நடைமுறையில் குழப்பம்! அரசு தனது முடிவை மறுபரிசீலணை செய்யவேண்டும் என கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பதிவுத் திருமண நடைமுறையில் குழப்பம்! அரசு தனது முடிவை மறுபரிசீலணை செய்யவேண்டும் என கோரிக்கை..

அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட பதிவு திருமணம் தொடர்பில் கிராமிய பதிவாளருக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி யாழில் நேற்றைய தினம் புதன்கிழமைகளில் பதிவாளர்கள் ஒன்றுகூடி தீர்மானம் எடுத்தனர்.

பல நூறு வருடங்களாக வழக்கத்திலுள்ள பதிவு திருமணமுறை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எடுத்த சில முடிவுகள் எமது பாரம்பரியத்தையும் பதிவாளர்கள் ஆகிய எமது கௌரவத்தையும் பாதிப்பதாக கருதுகிறோம்.

வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்கள் இலங்கையில் திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சினால் பலியிடப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி பதிவுத் திருமணத்தை செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மதிக்கிறோம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்று பதிவுத் திருமணத்தை மேற்கொள்வதற்கான அனுமதியை மாவட்ட பதிவாளர் ஊடாக கிராமிய பதிவாளர்களுக்கு வழங்க வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்ட சுற்று நிறுவத்தின் பிரகாரம் கிராமிய பதிவாளருக்கு பதிவுத் திருமணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி மறக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடானது இந்து மத வரலாற்று பாரம்பரியங்களை குறிப்பாக முகூர்த்த நேரத்தில் 

அதிபர் திருமணங்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட மாவட்ட பதிவாளர் ஒரு நாளில் பல பதிவு திருமணங்கள் இடம்பெற்றால் உரிய முகூர்த்த நேரத்தில் அவரால் பங்குகொள்ள முடியாது.

அதுமட்டுமல்லாது அரசாங்கத்தின் சுற்றுநிறுபம் சகல பதிவர்களுக்கும் உரிய நேரத்தில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தை மாதத்தில் இடம்பெறும் பதிவு திருமணங்களுக்கான முற்பாதி களை மேற்கொண்டு வெளிநாடுகளிலிருந்து 

மாப்பிள்ளைகள் வருகை தந்து விட்டனர். இவ்வாறான சூழ்நிலையில் பாதிப்பேர் திருமணத்துக்காக வருகை தந்த அவர்களும் நாமும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு