அழிவடைந்து வரும் அரிய வகை எறும்புண்ணி ஒன்று உயிருடன் மீட்பு!

ஆசிரியர் - Editor IV
அழிவடைந்து வரும் அரிய வகை எறும்புண்ணி ஒன்று உயிருடன் மீட்பு!

புத்தளம் முந்தல் பகுதியில் நேற்று காலை வீடொன்றின் முற்றத்தில் அரிய வகை எறும்புண்ணி ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.

இதன்போது புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று எறும்புண்ணியை உயிருடன் மீட்டு வில்பத்து சரணாலயத்தில் விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எறும்புண்ணி எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளும் குணமுடயவையெனெ தெரிவித்தனர்.

இவ் உயிரினமானது இலங்கையில் அழிவடைந்து வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு