ஆழிப்பேரலை அவல நாளின் 17ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறையில் உணர்வுபூர்வமாக..

ஆசிரியர் - Editor I
ஆழிப்பேரலை அவல நாளின் 17ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறையில் உணர்வுபூர்வமாக..

சுனாமி ஆழிப் பேரலையின் 17ம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது. 

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு 

தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு