உங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் - Admin
உங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி அதிர்ச்சி தகவல்

பயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘Spam’ மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவை Gmail ஆகும். பொதுவாக Gmail பயன்படுத்துபவர்களுக்கு, ‘Spam’ எனும் மின்னஞ்சல்கள் வணிக நோக்கில் பரவலாக அனுப்பப்படும்.

இதனை தவிர்ப்பதற்காக, அவற்றின் Server கணிப்பொறிகளில் ‘Spam Filters’ எனப்படும் முறையால் பிரித்தெடுக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளையும் மீறி பயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘Spam’ மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி நடைபெறுவது தெரியவந்துள்ளது.

அதாவது, சில குறிப்பிட்ட Gmail பயனாளர்களுக்கு இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், Spam Filter கட்டுப்பாட்டையும் மீறி mail வந்துவிடுகின்றன.

மேலும், இவற்றை அனுப்பும் முகவரிகளை ‘டெலஸ்’ எனும் கனடா நாட்டுத் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து அனுப்பப்படுவது போல போலியாக வைத்துக் கொள்கின்றன.

அத்துடன், மின்னஞ்சலின் தலைப்பு ‘ஆண்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் வழிகள் மற்றும் மருந்துகள்’ என்பதாக அமைந்துள்ளன. இந்த தகவல்கள் ‘மஷாபில்’ எனும் தொழில்நுட்ப இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இவ்வாறு சிறிய அளவிலான Gmail பயனாளர்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளோம். அதனை சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், இதன் காரணமாக பயனாளர்களின் கணக்கில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுகளும் கிடையாது’ என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு