நான் சாகப்போகிறேன் என உறுதியாக நினைத்தேன்! 40 அடி உயரத்தில் பட்டத்தில் தொங்கிய இளைஞன் உருக்கம்..

ஆசிரியர் - Editor I
நான் சாகப்போகிறேன் என உறுதியாக நினைத்தேன்! 40 அடி உயரத்தில் பட்டத்தில் தொங்கிய இளைஞன் உருக்கம்..

யாழ்.பருத்தித்துறை - புலோலியில் பட்டம் ஏற்றுவதற்கு சென்றிருந்த இளைஞன் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் சுமார் 40 அடி உயரத்திற்கு இளைஞன் துாக்கி செல்லப்பட்டுள்ளார். 

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது பட்டத்தின் கயிற்றை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, பட்டம் ஏற்றியுள்ளனர்.

இந்நிலையில், பட்டம் ஏற்றிய இளைஞர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இளைஞர் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இது குறித்து நடராசா மனோகரன் என்ற குறித்த இளைஞன் கூறுகையில், 

நான் முன்னால் நின்றேன். எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் எனக்கு அது தொியாது, இதனால் 2 தடவை பட்டம் மேலே துாக்கியது, அப்போது நான் கைவிடவில்லை. பின்னர் 3வது தடவையாக மேலே துாக்கியது. 

உச்சத்தில் இருந்தபோது நான் சாகப்போகிறேன் என நினைத்தேன். கீழே இருந்தவர்கள் என்னை காப்பாற்ற முயற்சித்தார்கள். ஒரு கட்டத்தில் கீழே வந்துவிட்டேன். என நினைத்தே கையை விட்டேன். 

அப்போதும் கணிசமான உயரத்தில் இருந்தே விழுந்திருக்கிறேன். விழுந்தவுடன் மயங்கிவிட்டேன் அதற்குப் பின்னர் வைத்தியசாலை சென்று 3 நாட்களின் பின வந்திருக்கிறேன். 

3 மாதங்கள் இயங்க முடியாது. இடுப்பு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டம் விடும் சிறுவர்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு