உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ்.கொட்டடியை சேர்ந்த வயோதிப பெண் மரணம்!
உண்ணிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த வயோதிப பெண்மணி ஒருவர் நேற்றய தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்.கொட்டடியை சேர்ந்த செபஸ்த்தியன் பெனடிக் றொசாரி (வயது63) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 16ம் திகதி அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்மணி
3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கு காரணம் உண்ணிக் காய்ச்சல் என மருத்துவ அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.