SuperTopAds

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி..! 3 மேலதிக வாக்குகளால்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி..! 3 மேலதிக வாக்குகளால்..

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

இன்றைய தினம் காலை 2022ம் ஆண்டுக்கான பாதீடு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 

இதன்போது 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெற்றிபெற்றது.

45 உறுப்பினர்கள் கொண்ட யாழ்.மாநகரசபையில், 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், 

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 2 பேரும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 பேரும்,

ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் வாக்களித்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர், 

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 பேர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2 பேர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் 

என மொத்தமாக 45 உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.