ஆட்டுக்கு குழை வெட்டச் சென்ற 16 வயது சிறுவன் கை குண்டு வெடித்து பலி!

திருகோணமலை - மூதுார் பகுதியில் கை குண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. தோப்பூர் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
ஆட்டுக்கு இழை குழைகள் வெட்டச் சென்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.