SuperTopAds

2022ம் ஆண்டில் அரச உத்தியோகம், வாகன இறக்குமதி, பால்மா இறக்குமதி கிடையாது! நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
2022ம் ஆண்டில் அரச உத்தியோகம், வாகன இறக்குமதி, பால்மா இறக்குமதி கிடையாது! நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ அதிர்ச்சி தகவல்..

2022ம் ஆண்டில் வாகன இறக்குமதி, அரச உத்தியோகத்தர்கள் நியமனம் போன்றன இருக்காது. என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நிதியமைச்சர் மேற்படி கருத்தை கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அடுத்த வருடமும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. 

அடுத்த வருடத்திற்கு புதிய அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். அந்நிய செலாவணி பற்றாக்குறையின் தீவிரத்தன்மையே இந்த தீர்மானங்களை எடுக்கக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார்.

அடுத்த வருடத்திற்கான பால்மா இறக்குமதிக்கு பணம் ஒதுக்க முடியாது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.