எஸ்.பி.திஸாநாயக்க பதவி விலகும்போதும் 300 சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்..

ஆசிரியர் - Editor I
எஸ்.பி.திஸாநாயக்க பதவி விலகும்போதும் 300 சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்..

அமைச்சர் எஸ்.பீ.திசநாயக்கா பதவி விலகிச் செல்லும் சமயமும் எந்தவித அனுமதியும் இன்றி 300 பேருக்கு சமுர்த்தி நியமனம் வழங்கிய நிலையில் அதிலிருந்தே பலரை வடக்கு மாகாணத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கானப்படும் சமுர்த்தி வெற்றிடத்தினைப் பயன்படுத்தி தெற்கு இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனிடம் தொடர்புகொண்டு  கேட்டபோதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தில் நிலவும் சாதாரண ஊழியர்கள் நியமனத்தின்போது வடக்கு இளைஞர்களிற்கே சந்தர்ப்பம் அளிக்கப்படும் என எமக்கு பலதடவை உறுதி வழங்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஓர் தடவை சமுர்த்தி உத்தியோகத்தர்களாக எந்தவிதமான அறிவித்தலுமின்றி கண்டியை சேர்ந்த பலர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாகவே தற்போதைய சமுர்த்தி அமைச்சர் மலிக் சமரவீரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த விடயத்தினை ஆராய்ந்த அமைச்சர் அதுதொடர்பில் பதிலளிக்கையில் பிரதம அமைச்சர் விடயம் இடம்பெற்ற காலத்தில் பதவி விலகிய அமைச்சர் எஸ்.பீ.திசநாயக்கா தான்  பதவி விலகிச் செல்லும் நாளிற்கு சில நாட்களிற்கு முன்பு   எந்தவித அனுமதியும் இன்றி 300 பேருக்கு சமுர்த்தி நியமனம் வழங்கிய நிலையில் அதிலிருந்தே பலரை வடக்கு மாகாணத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட 300 பேரில் அமைச்சரின் சொந்த ஊரான  கங்குறாங்கெட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் 190பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமித்தமை தொடர்பில் ஆராயப்படும் அதேவேளை வடக்கிற்கு அனுப்பப்பட்ட அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உடனடியாக திரும்ப அழைக்குமாறு செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் வழங்கியதாக தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு