SuperTopAds

தமிழ் மக்களின் விவசாய நிலங்களை பறித்துவிட்டு விவசாயத்தை முன்னேற்றுவது எப்படி?

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் விவசாய நிலங்களை பறித்துவிட்டு விவசாயத்தை முன்னேற்றுவது எப்படி?

இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் பல குளங்களை கட்டி விவசாயத்தை வளர்த்தார்க ள். ஆனால் இன்றைக்கு ஆட்சி செய்பவர்கள் இருக்கும் குளங்களையும் இராணுவத்திற்கு வ ழங்கிவிட்டு, தமிழ் மக்களின் விவசாய காணிகளை பறித்து சிங்கள மக்களுக்கு வழங்கிவிட்டு 'ஒன்றுபட்டு எழுவோம் சிறுபோகத்தை வெல்வோம்'என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். மத்திய மாகாண வி வசாய அமைச்சுக்கள் ஒன்றிணைந்து 'ஒன்றுபட்டு எழுவோம் சிறுபோகத்தை வெல்வோம்' எ ன்ற தொனிப்பொருளில் வறட்சியிலும் சிறுபோகத்தை வெற்றி கொள்வதற்கான செயற்றிட்டம் நேற்று ஒட்டுசுட்டானில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மே ற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபா ல சிறிசேனாவின் சிந்தனைக்கு அமைவாக ஒன்றாய் எழுவோம் சிறுபோகத்தை வெற்றிகொள்வோம். என்ற தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திவந்த பல குளங்கள் இன்றளவும் இ ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து கொண்டிருக்கின்றது. ஒட்டுசுட்டான்-அம்பகாமம் ப குதியில் பல குளங்கள் விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒட்டுசுட்டான் நகரை அண்டியுள்ள பிரமணாளங்குளம் என்ப குளம் இராணுவத்தின் கட்டுப்பட்டிற்குள் இருந்து கொண்டிருக்கின்றது. 

இதனைவிட மோசமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொ ந்தமான வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பட்டிற்குள் உள்ளது. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கி ன்றது. இதனால் முல்லைத்தீவு மாவட்டம் இன்று வறுமையில் 2ம் இடத்தில் உள்ளது. 

இங்கே பேசிய விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார் மத்திய, மாகாண விவசாய அi மச்சுக்களின் கிழ் உள்ள திணைக்களங்களில் 60 வீதம் ஊழியர்கள் வெற்றிடம் உள்ளதாக கூறியிருக்கின்றார். அதேபோல் 60 வீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வெற்றிடம் முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ளது.

 எனவே தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களை அபகரித்துக்கொண்டு விவசாயத்திற்கு பயன்படும் குளங்களை இராணுவத்திற்கு வழங்கிவிட்டு ஒன்றுபட்டு எழுவோம் சிறுபோகத்தை வெற்றிகொள்வோம் என கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எங்களை பொறுத்தளவில் ஒன்றுபட்டு எழுவோம் உரிமைகளை வெல்வோம் என்றே கூறவே ண்டியுள்ளது என்றார்.