கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதால் குழப்பமடைந்த இரணுவம், சில இடங்களில் தீபம் ஏற்றியவர்களுக்கு விசாரணையாம்..!

ஆசிரியர் - Editor I
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதால் குழப்பமடைந்த இரணுவம், சில இடங்களில் தீபம் ஏற்றியவர்களுக்கு விசாரணையாம்..!

கார்த்திகை தீப திருநாளான நேற்றய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் இராணுவத்தினர் தீபம் ஏற்றியவர்களை விசாரித்துடன் குழப்பும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. 

மாவீரர் நாள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாள் நினைவேந்தப்படும் நிலையில் நேற்றைய நாளிலிருந்தே (17) முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நினைவேந்தலுக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.

ந்த நிலையில் செல்வம் பெருக துன்பம் அகல வாழ்வு சிறக்க வேண்டி இந்துக்கள் வீடுகளின் முன்பாகவும் , தமது தொழில் நிலையங்கள், தோட்ட நிலங்கள் போன்றவற்றில் தீபம் ஏற்றி கார்த்திகைத்தீபத்திருநாளை அனுஷ்டிப்பது வழமை.

வழக்கம் போன்றே நேற்று இரவு 06 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இவ்வாறு வாழைக்குற்றிகளை வீட்டின் முன்பாக நாட்டி அதில் சுடர் ஏற்றி கார்த்திகை திருநாளை கொண்டாடிய நிலையில் குழப்பமடைந்த இராணுவத்தினர் 

மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் தீபம் ஏற்றிய சில வீடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை மாதத்தில் தங்களது பண்டிகைகளைக் கூட சுதந்தரமாக கொண்டாட முடியாத நிலையில் அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு