SuperTopAds

முல்லைத்தீவு- துணுக்காயில் 700 ஏக்கர் காணி வனவள திணைக்களத்திடம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- துணுக்காயில் 700 ஏக்கர் காணி வனவள திணைக்களத்திடம்..

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் 700 ஏக்கர் காணிகள் வனவளத்திணைக்களத்திடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வயல்காணிகள் மற்றும் கைவிடப்பட்ட குளங்கள் வனவளத்திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளன.

இந்நிலையில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறிய மக்களின் விவசாயச்செய்கைகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள துணுக்காய் பிரதேச செயலகம் வனவளத்திணைக்களத்திடமிருந்து 700 ஏக்கர் வயல் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.