நீக்கு! நீக்கு! இராணுவமயமாகும் முன்பள்ளி கல்வி முறையை நீக்கு!

ஆசிரியர் - Admin
நீக்கு! நீக்கு! இராணுவமயமாகும் முன்பள்ளி கல்வி முறையை நீக்கு!

துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளான அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் இணைந்து மல்லாவி நகர் பகுதியில் இன்று மாலை 2 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஒன்றிணைந்து மல்லாவி நகர் பகுதியில் இருக்கின்ற பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீக்கு! நீக்கு! அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு , வேண்டும்! வேண்டும்! கல்விக்கு 6 வீதம் வேண்டும்,உறுதிப்படுத்து!

உறுதிப்படுத்து!பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்து, வழங்கு! வழங்கு!அதிபர் ஆசிரியரின் சம்பள முரன்பாட்டுக்கு தீர்வு வழங்கு, வழங்கு! வழங்கு!24 வருடங்களாக கொள்ளையடித்த ஆசிரியர்களின் பணத்தை வழங்கு.

நீக்கு! நீக்கு! இராணுவமயமாகும் முன்பள்ளி கல்வி முறையை நீக்கு, அமுல்ப்படுத்து!அமுல்ப்படுத்து சுபோதினி கமிசன் அறிக்கையை அமுல்ப்படுத்து ,வழங்கு! வழங்கு!இடைக்கால சம்பள முறையை ஒரே தடவையில் வழங்கு, விற்காதே! விற்காதே! இலவச கல்வியை பணத்துக்கு நிற்காதே,நீக்கு! நீக்கு! இலவச கல்வியில் இடர்களை நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும்.

24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிளிதெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு, இலவசக் கல்வியை பணத்திற்கு விற்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு