மாவட்டச் செயலகத்தின் முன்பாக வெடிமருந்துடன் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் பொலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

ஆசிரியர் - Editor I
மாவட்டச் செயலகத்தின் முன்பாக வெடிமருந்துடன் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் பொலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டச் செயலக சுற்றாடலில் வெடிமருந்து மற்றும் கசிப்புடன் நடமாடியபோது கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

24.10.21 அன்று மாலை வேளைபகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவு பொலீசார் இவரை கைதுசெய்துள்ளார்கள். சுதந்திரபுரம் உடையார் கட்டு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 42அகவையுடைய நபரிடம் இருந்து 

200 கிராம் வெடிமருந்து மற்றும் 1500 மில்லி லீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன. இவரை 25.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிஸார் 

அவரை பொலீஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரிக்க மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீதிமன்றம் அவரை 72 மணத்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்துவிசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு