முல்லைத்தீவு மாவட்டத்தின் 117 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள்

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு மாவட்டத்தின் 117 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களுக்குட்ப்பட்ட 117 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களுக்குட்ப்பட்ட 117 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட 61 பாடசாலைகளில் 7 உயர்தர பாடசாலைகளை தவிர ஏனைய 54 பாடசாலைகளும் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட 68 பாடசாலைகளில் 5 உயர்தர பாடசாலைகளை தவிர ஏனைய 63 பாடசாலைகளுமாக 117 ஆரம்ப பிரிவு பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படும் நிலையில் இன்று பாடசாலைகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைதந்திருந்தனர் ஆசிரியர்கள் மாணவர்களை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றச்செய்து பாடசாலை வளாகத்துக்குள் மாணவர்களை அழைத்திருந்தனர்.

குறிப்பாக பாடசாலை வளாகத்துக்குள் நுழையும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தி கைகளை சவற்காரமிட்டு கழுவ செய்து உடல் வெப்பநிலையை பரிசோதித்து எந்நேரமும் சமூக இடைவெளிகளை போணுமாறு ஆலோசனை கூறி பாடசாலை வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தனர்.

குறிப்பாக இன்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமையானது தமக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தாம் கல்வி கற்க முடியாது இருந்ததாகவும் இதனால் தாம் பரீடசையை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்

நாடளாவிய ரீதியில் அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக கடந்த சித்திரை மாதம் 27ம் திகதியுடன் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தது இந்நிலையில் நாடு முழுவது முள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை(22-10-2021) நடைபெற்ற கொவிட்19 செயலணி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்.

200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற் கட்டமாக 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.எனவும் அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்.  

கொவிட்19 செயலணி கூட்டத்தில் இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தனவினால் இதற்கு அனுமதியளிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Radio