மாவட்டச் செயலகம் முன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரிடம் சோதனை..! உடைமையிலிருந்து வெடிமருந்து மீட்பு..

ஆசிரியர் - Editor I
மாவட்டச் செயலகம் முன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரிடம் சோதனை..! உடைமையிலிருந்து வெடிமருந்து மீட்பு..

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன்பாக சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் ஒருவரை பரிசோதனை செய்தபோது அவருடைய உடைமையில் வெடிபொருள் மற்றும் கசிப்பினை பொலிஸார் மீட்டுள்ளனர். 

24.10.21 நேற்று மாலை வேளைபகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நின்ற நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தபோது 

அவரிடம் இருந்து சட்டவிரோத வெடிமருந்து மற்றும் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரையும் கைதுசெய்துள்ளார்கள். சுதந்திரபுரம் உடையார்கட்டு 

புதுக்குடியிருப்பினை சேர்ந்த 42அகவையுடைய நபரிடம் இருந்து 200 கிராம் வெடிமருந்து மற்றும் 1500 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு பொலிஸ் 

நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இவரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்

தெரிவித்துள்ளார்கள்.

Radio