SuperTopAds

மிக விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்..!

ஆசிரியர் - Editor I
மிக விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்..!

எரிபொருள் கொள்வனவுக்கு டொலர் இல்லாமையினால் தொடர்ந்தும் சிக்கலை எதிர்கொள்வதாக கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமானது கையிருப்பில் உள்ள நிதியைக் கொண்டு நாளாந்தம் எரிபொருளைக் கொள்வனவு செய்துவருவதாகவும், இதனால் விரைவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.