SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கடந்த ஆண்டில் 1157.871மில்லியன்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கடந்த ஆண்டில் 1157.871மில்லியன்..

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கடந்த ஆண்டில் ஆயிரத்து 157.871 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டில் ஆயிரத்து 813.119 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் 

இதில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஆயிரத்து 157.871 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று மூவாயிரத்து 345 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படடுளளதாக மாவட்டச்செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு வாழ்வாதாரம் விவசாயம் குடிநீர் விநியோகம் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 608 புதிய வீடுகள் 487.20 மில்யியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 44 திருத்த வீடுகளுக்க 10 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.