இலங்கையின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் மரணம்!!
இலங்கை அணியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பந்துல வர்ணபுர தனது 68 ஆயவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.
வர்ணபுர திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இலங்கை ஒரு முழுமையான டெஸ்ட் விளையாடும் நாடாக மாறியபோது இலங்கை அணியை வழிநடத்தும் கௌரவம் அவருக்கு கிடைத்தது.
அவர் 1975 முதல் 1982 வரை தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 4 டெஸ்ட் மற்றும் 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.