மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜ.தே.கட்சி வசமானது..

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி, அதிகாரத்தைக்கைப்பற்றியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிததேர்தலையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று உறுபபினர்களில் மாந்தைகிழக்குப்பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாந்தைகிழக்குப்பிரதேச சபையின் ஆட்சியைஅமைக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டு இச்சபைக்கான தவிசாளரின் பெயர் விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (18-04-2018) மாந்தைகிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவு உள்ளுராட்சி அமைச்சின் செயாளர் பற்றிக்நிறஞ்சன் அவர்கள் தலைமையில் இன்று பகல் நடைபெற்றுள்ளது,
இதில் , சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஈழமக்கள் ஐனநாயக சுதந்திரக்கட்சி ஆகியற்றின் உதவியுடன் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது.
தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியைச்சேர்ந்த மகாலிங்கம் தயானந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜ்குமார் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் என்றும் எதிர்பார்த்த போதும் ஐக்கிய தேசியக்ககட்சி ஆட்சி அமைப்பத்திருப்பது குறிப்பிடத்தக்கது.