புதிய கூட்டணிக்கு சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு – சுரேஸ்

ஆசிரியர் - Editor II
புதிய கூட்டணிக்கு சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு – சுரேஸ்

“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டனி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) இழுதடித்து வருவதாகவும் இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர்” என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பொதுச் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கஜேந்திரகுமாரும் நானும் கூட்டாகக் கோரிக்கைவிடுத்திருந்தோம் ஆனால் அக்கோரிக்கையை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். மாற்றுத்திட்டம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருநாட்களுக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு