சினிமாவை மிஞ்சும் கடத்தல் கதை..! இலங்கையில் உகண்டா நாட்டு கடத்தல்காரி சிக்கினார், வயிற்றுக்குள்ளிருந்து 52 கொக்கேய் மாத்திரைகள் மீட்பு, இன்னும் உள்ளதாம்..
வயிற்றுக்குள் சுமார் 100 கொக்கேய்ன் போதை மாத்திரைகளுடன் இலங்கைக்கு வந்த உகண்டா நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.உகண்டாவில் இருந்து கட்டார் இராச்சியத்தின் தோஹா ஊடாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான
QR 664 இலக்க விமானத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் குறித்த பெண் இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில்
அவரை ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது இந்த கொக்கேய்ன் தொகை அவரின் வயிற்றில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தனது வயிற்றில் 100 உருண்டைகள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 51 உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.