SuperTopAds

பிரபல பாடகி யொஹானி யாருடைய மகள்?

ஆசிரியர் - Admin
பிரபல பாடகி யொஹானி யாருடைய மகள்?

இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகளை மீறிய கேணல் பிரசன்ன டி சில்வாவின் (Prasanna De Silva) மகளே இலங்கையின் பிரபல பாடகி யொஹானி (Yohani) என்பது முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பிரபல பாடகிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு (“மனிகே மகே கித்தே” எனும் பாடல் மூலம் சர்வதேச இசை அரங்கில் தனது பெயரைப் பொறித்துள்ள நிலையில்) வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அவரது தந்தையாருடன் தான் பணியாற்றிய தருணங்கள், போர்க்கள அனுபவங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.