தியாகதீபம் திலீபனுக்கு வடக்கில் பல இடங்களில் அஞ்சலி!

ஆசிரியர் - Editor I
தியாகதீபம் திலீபனுக்கு வடக்கில் பல இடங்களில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம், கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இடத்தில், அவர் உயிர்நீத்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில், இன்றைய தினம், தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு சுடரேற்றி, மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, அவரது அலுவலகத்துக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்தனர்

அதேவேளை, முல்லைத்தீவில் பிரத்தியேக இடத்தில் தியாக தீபம் திலீபனுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அ.ஜே. பீற்றர் இளஞ்செழியன், இன்றைய தினம் காலை 11 மணியளவில் மலர் தூபி பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று பீற்றர் இளஞ்செழியனுக்கு அவரது தந்தையாரின் பெயரில் முல்லைத்தீவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை வழங்க வந்த பொலிஸாரிடம், இறந்த எனது தந்தைக்கு உண்ணபிலவில் அமைந்துள்ள கத்தோலிக்க சேமக்காலையில் சென்று வழங்குமாறு தெரிவித்து, முல்லைத்தீவு தலைமை பொலிஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை பீற்றர் இளஞ்செழியன் திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில், பீற்றர் இளஞ்செழியனின் வீட்டை சுற்றி புலனாய்வளர்கள், இராணுவத்தினர், பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அறியமுடிகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு