SuperTopAds

விண்வெளி சுற்றுப்பயணம் வெற்றி!! -4 பேருடன் சென்ற விண்கலம் பூமிக்கு திரும்பியது-

ஆசிரியர் - Editor II
விண்வெளி சுற்றுப்பயணம் வெற்றி!! -4 பேருடன் சென்ற விண்கலம் பூமிக்கு திரும்பியது-

இன்ஸ்பிரேஷன் 4 என்று பெயரிடப்பட்ட விண்வெளி பயணத்தில் ஐசக் ஜாரெட் ஐசக், ஷேலி ஆர்சனாக்ஸ், சியான் பிராக்டர், கிறிஸ் செம்பிராஸ்கி உள்ளிட்ட 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ரொhக்கெட்டில் கடந்த வியாழக்கிழமை விண்வெளிக்குப் புறப்பட்டனர்.

தானியங்கி முறையில் செயல்படும் இந்த ராக்கெட் புறப்பட்ட 12 நிமிடங்களில் விண்கலத்தை சுற்று வட்டப்பாதையில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பியது.

சுமார் 3 மணி நேரத்தில் 585 கி.மீ.உயரத்தை விண்கலம் அடைந்தது. திட்டமிட்டபடி இலக்கை அடைந்த டிராகன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியது. விண்கலத்தில் சென்ற 4 பேரும் இசைக்கருவி வாசிப்பது போலவும், ஓவியம் வரைந்தும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

3 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பின் அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் தரையிறங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. 3 நாள் பயணத்தை நிறைவு செய்து இன்று அதிகாலை புளோ ரிடாவின் அட்லாண்க் கடலோரத்தில் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் இறங்கியது.