SuperTopAds

சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல்! அமைச்சர் லொஹான் ரத்வத்தே பதவி விலகினார்...

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல்! அமைச்சர் லொஹான் ரத்வத்தே பதவி விலகினார்...

சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர் லொஹான் ரத்வத்தவை பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த பணிப்பின் அடிப்படையில் அவர் பதவி விலகியுள்ளார். 

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகள் இருவரை முழங்காலில் இருத்தியதுடன் துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுத்த விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில் இத்தாலியலிருந்து பிரதமர் தொலைபேசி ஊடாக

அமைச்சரை தொடர்பு கொண்டு பதவி விலகுமாறு பணித்துள்ளதுடன், விசாரணைகள் முடியும்வரை அமைச்சு பொறுப்புக்களில் இருந்து இடைநிறுத்தப்படவேண்டும். என கூறியுள்ளதாகவும், ஜனாதிபதியையும் தொடர்பு கொண்ட பிரதமர் இந்த கோரிக்கையை

விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்நிலையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தமது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் தற்போது நடந்துவரும் சூழ்நிலையில், அமைச்சரின் இந்த செயற்பாடு இலங்கை அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அவரை உடனடியாக பதவிவிலக 

அரச மேல்மட்டம் கோரி இருந்தது இதன்படி தனது இராஜினாமா கடிதத்தை லொஹான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். லொஹானின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.