பஸ் பயணத்தின்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம்! வருகிறது புதிய சட்டம்..

ஆசிரியர் - Editor I
பஸ் பயணத்தின்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம்! வருகிறது புதிய சட்டம்..

பேருந்துகளில் பயணிக்கும்போது தடுப்பூசி அட்டையினை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் சட்டம் மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தொியவருகின்றது. 

குறித்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப் படுவதுடன் சட்டம் சரியாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க 

அதிகாரிகள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாகாண பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையைத் தாம் கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் 

பயணிகள் பஸ்களில் ஏறும் போது தடுப்பூசி செலுத்திய அட்டையைச் சரிபார்ப்பதற்கு நடத் துனருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

Radio