திருடினார்கள் என கட்டிவைத்து நையப்புடைப்பு! பொலிஸார் மீது நம்பிக்கையில் என கூறும் மக்கள், திருட்டே நடக்கவில்லை என கூறும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
திருடினார்கள் என கட்டிவைத்து நையப்புடைப்பு! பொலிஸார் மீது நம்பிக்கையில் என கூறும் மக்கள், திருட்டே நடக்கவில்லை என கூறும் பொலிஸார்..

கொழும்பு தெஹிவளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்ததாக குற்றஞ்சாட்டி இரு இளைஞர்களை பொதுமக்கள் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கரகம்பிட்டிய பொலிஸ்விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை இளைஞர்கள் திருடியதாக சொல்லப்படும் கடையில் எதுவும் திருட்டுப் போயிருக்கவில்லையென தெரிவிக்கும் கரகம்பிட்டிய பொலிஸார் 

இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதேவேளை குறித்த நபர்கள் தனது வீட்டில் ஒரு வாரத்தில் பல தடவைகள் திருட்டில் ஈடுபட்டதாகவும், 

பொலிஸார் அது குறித்து நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. எனவும் தொிவித்திருக்கின்றனர். 

மேலும் கட்டப்பட்ட இளைஞர்கள் கழுத்தில் தெஹிவளை திருடர்கள் என பதாகையும் எழுதிவைத்துள்ளனர். 

Radio