இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றுக்குள்ளான ஒருவர் ஆபத்தான நிலையில்..! மேலும் இருவருக்கு சிறுநீரக செயலிழப்பு..
கரும்பூஞ்சை தொற்றுக்குள்ளான சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,
குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்றாலும், இவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு முகக்கவசத்தை நீண்ட நாட்களுக்கு பாவிக்கின்றமை,
அசுத்தமான முகக்கவசம் பயன்படுத்தியமை போன்றவற்றால் இந்த கருப்பு பூஞ்சை நோய் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.