பாலியல் பலவீனத்தை ஏற்படுத்துமா கொரோனா தடுப்பூசி..? இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விளக்கம்..
தடுப்பூசி பெற்றுக் கொண்டால் பாலியல் பலவீனம் ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களால் 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்டவர்களிடையே தடுப்பூசி பெறும் ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இலங்கையில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில பிரதேசங்களில் இளைஞர், யுவதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவலின் படி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால்
பாலியல் ரீதியான சக்தி குறைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இழக்கப்படும் எனக் கூறி இவ்வாறான பல்வேறு கதைகள் இளைஞர், யுவதிகளின் தலைக்குள் புகுத்தப் பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை. அது முற்றிலும் போலியானது. எனவே இலங்கையில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.