படையினர் மற்றும் பொலிஸாரை அதிகளவில் களமிறக்கி முடக்கல் நிலையை இறுக்கமாக்குங்கள்! அரசுக்கு ஆலோசனை..
கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாமல் சமூகத்தில் 80 வீதமானவர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, முடக்கலை முறையாக நடைமுறைப்படுத்த அதிகளவு படையினர், பொலிஸாரை களமிறக்குமாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டில் சமூக பரவல் காணப்படுகின்றது தற்போது கொத்தணி வைரஸ் பரவல் குறித்து தகவல் வெளியாவதில்லை. மாறாக சமூகத்திலேயே பரவல் காணப்படுகின்றது.
இவ்வாறான நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு அதிகளவு பிசிஆர் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு முன்னெடுக்கப்படும் விதம் குறித்து
தான் அதிருப்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முடக்கல் நிலையை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக அதிகளவு படையினரையும் பொலிஸாரையும் பயன்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.