நாடு நெருக்கடிக்குள் உள்ள நிலையிலும் தமிழர்களின் காணிகளை பறிப்பதில் அரசு தீவிரம்! இன்றும் பறிப்பு முயற்சி முறியடிப்பு - ரவிகரன்..

ஆசிரியர் - Editor I
நாடு நெருக்கடிக்குள் உள்ள நிலையிலும் தமிழர்களின் காணிகளை பறிப்பதில் அரசு தீவிரம்! இன்றும் பறிப்பு முயற்சி முறியடிப்பு - ரவிகரன்..

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் பூமடுகண்டில் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயற்காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் அபகரிக்க எடுத்த முயற்சி 12.09.2021 இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.

என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தொிவிக்கையில் நாடு முழுவதும் மக்கள் கொரோனா பிடிக்குள் பதைபதைத்துள்ளதுடன், வேலையில்லை, பொருளாதார நெருக்கடி, 

என பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் “எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்” என்பதுபோல் முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணி பிடிக்கும் வேலையில் அரசும் அரசின் ஏவலாளிகளும் பின் நிற்கவில்லை. 

எனவும் ரவிகரன் சாடியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு